Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏற்றங்களுக்கும், சரிவுக்கும், சோனியா குடும்பமே காரணம்: மணிசங்கர் அய்யர்..!

Advertiesment
Manishankar Ayyar

Mahendran

, திங்கள், 16 டிசம்பர் 2024 (11:18 IST)
என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏற்றங்கள் மற்றும் சரிவு ஆகிய இரண்டுக்குமே சோனியா காந்தி குடும்பம் தான் காரணம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர அய்யர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர அய்யர் தமிழகத்தில் இருந்து பலமுறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் என்பதும், சமீபத்தில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில், "என் வாழ்க்கையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் சரிவு ஆகிய இரண்டுக்குமே சோனியா காந்தி குடும்பம் தான் காரணம்" என்று கூறியுள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளாக சோனியா காந்தியை சந்திக்க முயற்சித்தேன், ஆனால் எனக்கு வாய்ப்பு தரவில்லை. ராகுல் காந்தியை கூட ஒருமுறை மட்டுமே சந்திக்க முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தியை மட்டும் சிலமுறை சந்திக்க சில வாய்ப்புகள் கிடைத்தது என்றும், "எப்போதாவது தொலைபேசியில் அழைத்து பேசுவார்" என்று கூறிய மணிசங்கர அய்யர் "ராகுல் காந்திக்கு பிறந்த நாள் தெரிவிக்க வேண்டுமானால் கூட பிரியங்கா காந்தி வாயிலாக தான் தெரிவிக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது" என்றும் தெரிவித்தார்.

"நான் ஏன் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டேன் என்று விளக்கம் கேட்டு கடிதம் எழுதி உள்ளேன், ஆனால் இதுவரை அந்த கடிதத்திற்கு எனக்கு பதில் வரவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.

மணிசங்கர ஐயரின் இந்த பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

த.வெ.க.வில் இணைவது பற்றி விரைவில் அறிவிப்பேன்: ஆதவ் அர்ஜூனா