Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூட்கேஸில் நண்பரை பார்சல் செய்த மாணவர்! – மங்களூரில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (11:49 IST)
மங்களூரில் உள்ள அடுக்குமாடு குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்த மாணவர் ஒருவர் தன் நண்பனை சூட்கேஸில் அடைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளியாட்களை உள்ளே அனுமதிக்க பல அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகங்கள் தடை விதித்துள்ளன. மங்களூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகம் ஒன்றும் தங்களது குடியிருப்பு பகுதிகளுக்கு வெளியாட்கள் நுழைவதை தடுக்க பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த மாணவர் ஒருவர் தனது நண்பனை தனது வீட்டிற்குள் அழைத்து செல்ல முயன்றுள்ளார். யாருக்கும் தெரியாமல் நண்பனை வீட்டிற்குள் அழைத்து செல்ல ஒரு பெரிய சூட்கேசில் அவரை வைத்து மூடியுள்ளார்.

ஆனால் அதை எடுத்து செல்லும்போது சூட்கேஸ் அசைந்ததால் குடியிருப்பு வாசிகள் அதை திறந்து காட்ட சொல்லியிருக்கிறார்கள். அதை திறந்தபோது அதில் அவரது நண்பர் இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிறகு இதுகுறித்து போலீஸுக்கு புகார் அளிக்க அவர்கள் வழக்கு பதிவு செய்யாமல் இருவரையும் கண்டித்து அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

இனிமேல் குளுகுளுவென பயணம் செய்யலாம்.. சென்னையின் முதல் ஏசி மின்சார ரயி தொடக்கம்..

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments