தொலைக்காட்சி அரங்கத்துக்கு சென்று கொலையை ஒப்புக்கொண்ட நபர் !

Webdunia
வியாழன், 16 ஜனவரி 2020 (08:01 IST)
சண்டிகாரில் உள்ள நியுஸ் 18 தொலைக்காட்சி அரங்கத்துக்கு வந்த மனேந்தர் சிங் என்பவர் தன் காதலியைக் கொலை செய்ததை ஒத்துக்கொண்டுள்ளார்.

சண்டிகார் மாவட்டத்தைச் சேர்ந்த மணிந்தேர் சிங் என்பவர் சப்ரஜித் என்ற பெண்ணைக் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்துள்ளார். ஆனால் சப்ரஜித்துக்கு அவருடைய உறவினர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக மணிந்தேர் சந்தேகித்துள்ளார். இதையடுத்து கடந்த மாதம் 31 ஆம் தேதி அவரை ஹோட்டலில் சந்தித்த இருவரும் இது சம்மந்தமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனால் கோபத்தில் மனிந்தேர், சப்ரஜித்தின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தலைமறைவான அவரைப் போலிஸார் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென சண்டிகார் நியுஸ் 18 தொலைக்காட்சி அரங்குக்கு வந்து தன் காதலியைக் கொலை செய்ததை மனேந்தர் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவரைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

காபி ரூ.700, தண்ணீர் பாட்டில் ரூ.100.. இப்படி விலை வைத்தால் தியேட்டர்கள் மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

குருநானக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்தியர்களுக்கு மறுப்பு: பாகிஸ்தான் அடாவடி..!

ஒரே நபர் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? ராகுல் காந்திக்கு கேள்வி

ஓட்டுனர் உரிமத்துடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்.. இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments