Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போட முடியாது: டெல்லி மாநில அரசு

Webdunia
புதன், 15 ஜனவரி 2020 (20:19 IST)
மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கும் ஜனவரி 22ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற முடிவு செய்திருந்த நிலையில் இந்த தண்டனையை நிறைவேற்ற முடியாது என டெல்லி அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
 
இந்த வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் திஹார் சிறையில் வரும் 22ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங், குடியரசுத் தலைவரிடம் கருணை மனு செய்துள்ளதாகவும் இந்த கருணை மனு மீது குடியரசுத் தலைவர் முடிவெடுக்கும் வரை தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாது என்றும் டெல்லி மாநில அரசு கூறியுள்ளது
 
தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு 14 நாட்களுக்கு  முன்னரே நோட்டீஸ் அளிக்கப்பட வேண்டும் என்ற சட்ட விதி இருக்கின்றது என்பதால் குடியரசு தலைவர் கருணை மனுவை நிராகரித்தாலும் ஜனவரி 22ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்