ரயில் தண்டவாளத்தில் குடையுடன் படுத்து உறங்கிய நபர். நடு வழியில் நிறுத்தப்பட்ட ரயில்..!

Siva
ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2024 (15:43 IST)
ரயில் தண்டவாளத்தில் குடையுடன் படுத்து தூங்கிய நபரால் அந்த வழியாக சென்ற ரயில் காலதாமதமாக சென்றதாக தகவல் வெளியாகி உள்ளன.

உத்தரபிரதேச மாநிலத்தில் பிஸியான ரயில் தண்டவாளத்தில் ஒரு நபர் குடையுடன் படுத்து தூங்கியதாக தெரிகிறது/ இந்த நிலையில் ரயில் லோகோ பைலட் தூரத்திலிருந்த போதே யாரோ ஒருவர் தண்டவாளத்தில் படுத்திருப்பதை பார்த்ததும் சுதாரித்து ரயிலை நிறுத்தினார்.

அதன் பிறகு அவர் இறங்கி வந்து தண்டவாளத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பினார். நீண்ட நேரம் கழித்து தான் அந்த நபரை எழுப்ப முடிந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக குடையுடன் தூங்கிய நபர் லோகோ பைலட் எழுப்பியதை அடுத்து எழுந்து அவர் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரயில் தண்டவாளத்தில் குடையுடன் தூங்கிய நபர் மனநல குறைபாடு உள்ளவர்  என்று அந்த பகுதி மக்கள் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments