இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று போலத்திற்கு பயணம் புறப்படும் நிலையில், அதன்பின்னர் ரயில் வழியாக உக்ரைன் செல்ல உள்ளார்.
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இன்று மற்றும் நாளை போலந்து நாட்டில் பயணம் மேற்கொள்கிறார். கடந்த 45 ஆண்டுகளில் போலந்து நாட்டிற்கு அரசு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய பிரதமர், நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கு அந்நாட்டு பிரதமர் டொனால்ட் டஸ்க் மற்றும் அதிபர் ஆண்ட்ரெஜ் டூடாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் பிரதமர் மோடி, அதன் பின்னர் வர்சாவில் உள்ள இந்திய வம்சாவளி மக்களை சந்திக்கிறார். போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு 23ம் தேதி சொகுசு ரயில் மூலமாக உக்ரைனுக்கு செல்கிறார் பிரதமர் மோடி.
ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி உக்ரைனுக்கு செல்ல உள்ளார். கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை சந்தித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தங்கள் நாட்டுக்கு வர பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்பேரில் ரயில் மூலமாக சுமார் 10 மணி நேரம் பயணம் செய்து உக்ரைன் செல்ல உள்ளார் பிரதமர் மோடி.
Edit by Prasanth.K