Publish Date: Sat, 15 May 2021 (16:49 IST)
Updated Date: Sat, 15 May 2021 (16:50 IST)
வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறை இல்லாததால் இளைஞர் ஒருவர் மரத்தின் மேல் கட்டில் போட்டு தனிமைப்படுத்திக் கொண்டுளார்.
தெலங்கானாவைச் சேர்ந்த சிவா என்ற வாலிபருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாததால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள சொல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளார். ஆனால் அவர் வீட்டில் அறை வசதி இல்லை.
இதனால் வீட்டின் அருகே உள்ள மரத்தின் மீது கட்டிலை கட்டி தன்னை தனிமைபடுத்தி கொண்டுள்ளார். அவருக்கான உணவு மற்றும் மாத்திரைகளை உறவினர்கள் கயிறு ஒன்றில் கட்டி அனுப்புகின்றனர். இது சம்மந்தமான புகைப்படம் வெளியாகி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.