Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெளிநாட்டில் இருக்கும் தந்தையுடன் வீடியோ கால் பேச உதவிய நபர் – கொலையில் முடிந்த விபரீதம் !

Advertiesment
வெளிநாட்டில் இருக்கும் தந்தையுடன் வீடியோ கால் பேச உதவிய நபர் – கொலையில் முடிந்த விபரீதம் !
, திங்கள், 14 அக்டோபர் 2019 (08:12 IST)
உத்தரபிரதேசத்தில் தன்னுடன் பழகிய பெண் பின் வாங்கியதால் கோபமான இளைஞர் அந்த பெண்ணையும் அவரது தாயையும் கொலை செய்துள்ளார்.

உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் நீசன். இவருக்கு நூரன் என்ற மனைவியும் 5 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் நீசன் குடும்ப சூழல் காரணமாக வெளிநாட்டுக்கு சென்று வேலைப் பார்த்து வருகிறார். வெளிநாட்டில் இருக்கும் நீசன் தன் வீட்டில் உள்ளோரிடமும் வீடியோ கால் பேசுவதற்காக நீசனின் நண்பரனான விஷ்வகர்மா தன்னுடைய போனைக் கொடுத்து உதவி செய்துள்ளார். இதனால் இவர் அடிக்கடி நீசனின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

அப்போது அவருக்கும் நீசனின் மூத்த மகள் கசாலாவுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் திடீரென கசாலா விஷ்வகர்மாவுடன் பழகுவதை நிறுத்தியுள்ளார். இதனால் அதிருப்தியடைந்த அவர் கசாலாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கசாலாவின் தாய் நூரன் அவரை வீட்டுக்குள் அனுமதிக்காமல் கதவை சாத்தியுள்ளார். இதனால் கோபமான விஷ்வகர்மா, நூரன் மற்றும் அவரது மகள் கசாலாவை கொலை செய்து விட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். இரு உடல்களையும் கைப்பற்றிய போலிஸார் விஷ்வகர்மாவைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த கொலைகள் சம்மந்தமாக அறிந்த நீசன் வெளிநாட்டில் இருந்து இந்தியா வருவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். நீசனின் மற்ற குழந்தைகள் உறவினர்களின் அடைக்கலத்தில் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெதர்லாந்து ராஜா-ராணி இந்தியா வருகை! கேரளாவிற்கும் வருகை தர திட்டம்