உத்தர பிரதேசத்தில் 16 வயது பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் 16 வயது பள்ளி மாணவி தலையில் அடிபட்டு கழுத்து நெறிக்கப்பட்டு சாலையில் சடலமாக கிடந்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த அந்த சிறுமியின் ஊரைச் சேர்ந்தவர்கள் அவரின் சாவுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். அதில் என்ன பேரதிர்ச்சி என்றால் சிறுமியைக் கொன்ற இளைஞனும் அந்த போராட்டத்தில் கலந்துகொண்டதுதான்.
கொலை சம்மந்தமாக துப்பு துலக்கிய போலிஸார் குறிப்பிட்ட பகுதியில் செயல்பட்ட செல்போன் எண்களை ட்ராக் செய்த சுனில் என்ற இளைஞர் மேல் சந்தேகம் வந்து அவரை விசாரித்துள்ளனர். ஒரு கட்டத்தில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.