Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

21 ஆயிரமாக உள்ளதினசரி பாதிப்பு! – இந்திய கொரோனா நிலவரம்!

Advertiesment
21 ஆயிரமாக உள்ளதினசரி பாதிப்பு! – இந்திய கொரோனா நிலவரம்!
, வெள்ளி, 8 அக்டோபர் 2021 (10:00 IST)
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது.
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,257 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,39,15,569 ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 271 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,50,127 ஆக உயர்ந்தது.
 
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 24,963 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,32,25,221 ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் இதுவரை 93,17,17,191 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் 50,17,753 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளிக்கு செல்லும் 1-8 வகுப்பு மாணவர்கள்?