Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செல்போனில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

Advertiesment
Divorce

Mahendran

, சனி, 12 ஏப்ரல் 2025 (11:51 IST)
செல்போனில் "தலாக்" கூறி மனைவியை விவாகரத்து செய்த நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கேரளாவில் மலப்புரம் என்ற பகுதியை சேர்ந்த பெண் திருமணத்திற்கு பிறகு கணவனை பிரிந்து, ஒரு ஆண்டுக்கும் மேல் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார். கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால்தான் அவர் பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது.
 
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன், அந்த பெண்ணின் தந்தையின் செல்போன் மூலம் அவருடன் தொடர்பு கொண்ட கணவர், மூன்று முறை "தலாக்" என்று கூறி விவாகரத்து செய்து விட்டதாக அறிவித்துள்ளார்.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவருடைய கணவன் மீது, இஸ்லாமிய பெண்கள்   திருமண உரிமை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
பெண்ணின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கணவன் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
"தலாக்" கூறிய அழைப்பு செல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த பதிவை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி தான் ஊழல் கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின்