Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளம்பெண் நரபலி: மந்திரவாதி கைது!

இளம்பெண் நரபலி: மந்திரவாதி கைது!

Advertiesment
இளம்பெண் நரபலி: மந்திரவாதி கைது!
, வெள்ளி, 21 அக்டோபர் 2016 (16:02 IST)
கொல்கத்தாவின் மிட்னாபூரில் இளம்பெண் ஒருவர் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை செய்த மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.


 
 
நேற்று முன்தினம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் இளம்பெண்ணின் உடலின் அருகில் பூஜை நடந்ததற்கான தடயங்களை கண்டறிந்தனர்.
 
இதனையடுத்து காவல்துறையினர் அந்த பகுதியில் பில்லி, சூனியம் செய்யும் ராமபதா மன்னா என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது அந்த மந்திரவாதி அந்த இளம்பெண்ணை, செல்வசெழிப்பை பெறுவதற்காக கடவுளுக்கு நரபலி கொடுத்ததை ஒப்புக்கொண்டார்.
 
அருகில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் சந்தித்த அந்த இளம்பெண்ணிடம் தன்னுடைய பூஜையில் கலந்து கொண்டால் என்னுடைய மந்திரத்தால் உன்னுடைய பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும் என கூறி அந்த பெண்ணை அழைத்து சென்று நரபலி கொடுத்துள்ளான் அந்த மந்திரவாதி.
 
இதனையடுத்து மந்திரவாதியை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்று வேறு ஏதாவது நரபலி சம்பவங்களில் இந்த மந்திரவாதி ஈடுபட்டாரா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனர் அகத்தியனின் மனைவி மரணம்