Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

Mahendran
சனி, 11 ஜனவரி 2025 (13:04 IST)
திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணை கொலை செய்து, அந்த பெண்ணின் பிணத்தை 8 மாதங்களாக பிரிட்ஜில் வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள  தேவாஸ் என்ற பகுதியில் சஞ்சய்  என்ற நபர், ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், வேறொரு பெண்ணுடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக லிவிங் டூ முறையில் குடும்பம் நடத்தியதாக தெரிகிறது. அதன் பின்னர், அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தியதால், கோபமடைந்த சஞ்சய் அந்த பெண்ணை கொலை செய்து, தனது வீட்டில் உள்ள பிரிட்ஜில் உடலை வைத்துள்ளார்.

எட்டு மாதங்களாக பிரிட்ஜில் உடல் இருந்ததால் துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சஞ்சய் வீட்டுக்கு வந்து சோதனை செய்தபோது, ஃபிரிட்ஜில் அழுகிய நிலையில் இருந்த பெண்ணின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து சஞ்சயை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கடந்த ஜூன் மாதமே பிங்கி என்ற அந்த பெண்ணை கொலை செய்ததாகவும், உடல் கெட்டுப்போகாமல் இருக்க பிரிட்ஜில் வைத்ததாகவும், ஆனால் தனது குடியிருப்புக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் உடல் அழுகி துர்நாற்றம் வீசியுள்ளதாகவும், அதனால் தான் வெளியே தெரிந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரண்ட் ஷாக் வைத்து மீன்பிடிக்க முயற்சி! மின்சாரத்தில் சிக்கி இளைஞர்கள் பலி!

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ரேஞ்சர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

3 வயது குழந்தைக்கு ஆன்மீக சிகிச்சை.. பரிதாபமாக உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த சிஆா்பிஎஃப் வீரர் விசாரணையின்றி டிஸ்மிஸ்.. பெரும் பரபரப்பு..!

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments