Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

Mahendran
சனி, 11 ஜனவரி 2025 (11:54 IST)
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே என தவெக தலைவர் விஜய், நீட் விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
 
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே.... என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது.
 
கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?
 
எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று நடைபெறவிருந்த தவெக மாவட்ட செயலாளர் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல.. ஈபிஎஸ் ஆவேச பேச்சு..!

மாமனாரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மருமகள்.. சந்தேகம் வராமல் இருக்க உடல் முழுவதும் மஞ்சள் பூச்சு..!

நாளை கூடுகிறது பாராளுமன்றம்.. டிரம்ப், வங்கமொழி மக்கள் வெளியேற்றம்.. பீகார் தேர்தல் பிரச்சனையை எழும்புமா?

இன்று முதல் 3 நாட்களுக்கு செம மழை! எந்தெந்த பகுதிகளில்..? - வானிலை ஆய்வு மையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments