சபாநாயகரை நோக்கி கையேட்டை எறிந்த மம்தா கட்சி எம்பி சஸ்பெண்ட்!
Publish Date: Tue, 21 Dec 2021 (19:43 IST)
Updated Date: Tue, 21 Dec 2021 (19:45 IST)
சபாநாயகரை நோக்கி கையேட்டை எறிந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சியை சேர்ந்த எம்பி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்றம் தற்போது கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டத்தொடரில் கலந்து கொண்ட திரிணாமுல் கட்சியை எம்பி டெரிக் ஓ பிரையன் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
மாநிலங்களவையின் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவைத்தலைவர் இருக்கையை நோக்கி அவர் கையேட்டை எறிந்ததை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது
ஏற்கனவே 12 எதிர்க்கட்சி என்பது செய்ய சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்