Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோவாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்: மம்தாவுக்கு கண்டனம் தெரிவித்த ப சிதம்பரம்!

Advertiesment
கோவாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்: மம்தாவுக்கு கண்டனம் தெரிவித்த ப சிதம்பரம்!
, திங்கள், 13 டிசம்பர் 2021 (08:16 IST)
கோவா மாநிலத்தை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்றும் கடவுளை கோவா மாநிலம் காப்பாற்ற வேண்டும் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜக காங்கிரஸ், பாஜக மட்டுமின்றி தற்போது திரிணாமுல் காங்கிரசும் களமிறங்கியுள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் சமீபத்தில் அங்கு பிரச்சாரம் செய்ய போது கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கு மாதம் ரூபாய் 5000 வழங்கப்படும் என்று தெரிவித்தார் 
 
இது குறித்து கருத்து கூறிய சிதம்பரம் அவர்கள் கோவாவில் மூன்றரை லட்சம் குடும்பங்களுக்கு மாதம் 5000 வழங்கினால் மாதம் 175 கோடியும், ஆண்டுக்கு 2100 கோடி செலவாகும் 
 
ஏற்கனவே கோவா மாநிலத்திற்கும் 23,473 கோடி கடன் உள்ளது எனவே கூடுதல் கடன் வாங்கினால் கோவா மாநிலத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் அல்லது கடவுளை கோவா காப்பாற்றட்டும் என்று தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிபின் ராவத் குறித்து சர்ச்சை கருத்து..! – கர்நாடகாவில் ஒருவர் கைது!