Publish Date: Thu, 11 Mar 2021 (16:15 IST)
Updated Date: Thu, 11 Mar 2021 (16:03 IST)
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியை பாஜகவினர் தாக்கியதாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகள் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த முறை பவானிப்பூர் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பேனர்ஜி சுவேந்து அதிகாரியின் சவாலை ஏற்று அவரை எதிர்த்து போட்டியிட நந்திகிராம் தொகுதியை தேர்வு செய்துள்ளார்.
இதனால் அங்கு வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு பரப்புரையை மேற்கொண்டார். பின்னர் தனது காருக்கு திரும்பும் நேரத்தில் காவலர்கள் பக்கத்தில் இல்லாத நேரம் பார்த்து அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளதோடு முதுகிலும் அதிக வலி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து புகாரும் அளித்துள்ளார்.
ஆனால் மம்தாவை யாரும் தாக்கவில்லை என்றும் அவர் கார் கதவு சாலை ஓரம் இருந்த தூண் ஒன்றில் மோதியதில்தான் அவருக்குக் காயம் ஏற்பட்டதாக நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளதாக ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.