Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காங்கிரஸ் விரும்பினால் கூட்டணிக்கு தயார்! – மம்தா மறைமுக அழைப்பு!

Advertiesment
Mamta Banerjee
, வெள்ளி, 11 மார்ச் 2022 (16:02 IST)
நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது குறித்து மம்தா பானர்ஜி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் காங்கிரஸ் எந்த மாநிலத்திலும் வெற்றியடையாமல் தோல்வியை தழுவியது. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியை தற்போது ஆம் ஆத்மி பிடித்துள்ள நிலையில் தேசிய அளவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்க இரண்டாக குறைந்துள்ளது. இது காங்கிரஸுக்கு மிகப்பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸுக்கு ஆறுதல் தெரிவித்து பேசிய மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி “5 மாநில தேர்தல் தோல்வியை கண்டு சோர்வடைய வேண்டாம். நேர்ம்றையாக சிந்தியுங்கள். காங்கிரஸ் விரும்பினால் எதிர்வரும் 2024 மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட தயார்” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''மக்கள் தான் எஜமானவர்கள் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது ''- முதல்வர் ஸ்டாலின்