Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காலாவதியான மோடியை ஏன் சந்திக்க வேண்டும்? கெத்து காட்டும் மம்தா

காலாவதியான மோடியை ஏன் சந்திக்க வேண்டும்? கெத்து காட்டும் மம்தா
, செவ்வாய், 7 மே 2019 (09:59 IST)
மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி மோடி தன் மீது வைத்த குற்றச்சாட்டிற்கு அதிரடியாக பதில் அளித்துள்ளார். 
 
மோடி மேற்கு வங்கத்தில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, ஃபானி புயல் பாதிப்பு குறித்து மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியிடம் தொலைபேசியில் விவாதிக்க விரும்பினேன். அதற்காக அவருக்கு போன் செய்தேன். ஆனால், மம்தா கர்வம் பிடித்தவர். என்னுடன் பேச மறுத்துவிட்டார் என குற்றம்சாட்டி இருந்தார். 
 
மோடியின் இந்த குற்றச்சாட்டிற்கு மம்தா பேனர்ஜி அதிரடியாக பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ஃபானி புயல் பாதிப்புக்கென பிரத்யேகமாக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தால், அதில் பங்கேற்பது குறித்து பரிசீலனை செய்திருப்பேன். 
webdunia
ஆனால், மோடி தேர்தல் பிரசாரத்துக்காக வந்தார். எனவே, காலாவதி பிரதமருடன் ஒரே மேடையில் பங்கேற்க மாட்டேன். நிவாரண பணிகளை மேற்கொள்ளவும், இழப்பீடு அளிக்கவும் எனது அரசுக்கு திறன் உள்ளது. 
 
எனது அரசுக்கு மத்திய அரசின் உதவி தேவையில்லை. தேவைப்பட்டால், புதிதாக பதவி ஏற்கும் பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறேன். இதற்கு முன்பு, மோடியை 2 தடவை சந்தித்து நிதி கேட்டேன். ஆனால், அப்போது எதுவுமே செய்யவில்லை இப்போது மட்டும் என்ன என கேட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழர்களுக்கு ஹிந்தி தெரியல அதான் வேலை கிடைக்கல... அதிமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு