Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

Siva
வெள்ளி, 30 மே 2025 (20:27 IST)
பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக்காலத்தை முன்னிட்டு, பாஜக "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் நடைப்பயணத்தை நாடு முழுவதும் மேற்கொண்டு வருகின்றது. இந்தப் பயணத்தின் போது, பெண்களுக்கு சிந்தூரம் வழங்கும் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன.
 
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறுகையில், “ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாஜக அரசியல் நாடகம் நடத்துகிறது. ராணுவத்தின் வீரத்தை தங்களுக்கே ஒதுக்க முயற்சி செய்கிறார்கள். மோடியை ஒருவித கடவுளாக போற்றி, வீடுவீடாக சென்று பெண்களுக்கு குங்குமம் கொடுப்பது என்பது பாரம்பரியத்தை திரிபுபடுத்தும் செயல்,” என விமர்சித்தார்.
 
இதில் மேலும் காங்கிரஸ் கட்சியும் குரல் கொடுத்து, “ராணுவத்தின் தாக்குதலை பாஜக அரசியல் லாபத்துக்குப் பயன்படுத்துகிறது. பெண்களின் உணர்வுகளை அரசியல் வசீகரத்திற்காக பயன்படுத்துவது முறையல்ல,” என தெரிவித்தது.
 
பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை "ஆபரேஷன் சிந்தூர்" என அழைத்ததை நினைவுபடுத்தும் வகையில் இந்த சின்னத்தை பாஜக தற்போது தங்களது பிரசாரத்தில் பயன்படுத்துகிறது. ஆனால், இது அரசியல் நோக்கத்தில் மாறியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
 
இந்த சூழலில், “பெண்களின் குங்கும மரியாதை அரசியல் விளம்பரமாக மாறக்கூடாது” என்பது எதிர்ப்பாளர்களின் வலியுறுத்தலாக உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments