காங்கிரசை கழட்டிவிட்ட மம்தா.! மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டி.! இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு.!

Senthil Velan
புதன், 24 ஜனவரி 2024 (12:53 IST)
மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு வருகிற ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை தேர்தலில் தோற்கடிக்க, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. ஆனால் அந்த கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடையே பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது.
 
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ்  தனித்து போட்டியிட போவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் இரு தொகுதிகளை மட்டுமே காங்கிரஸுக்கு மம்தா ஒதுக்கியதாக கூறப்படுகிறது. அதை காங்கிரஸ் ஏற்க மறுத்ததால் தனித்துப் போட்டியிடப் போவதாக மம்தா பானர்ஜி தற்போது அறிவித்துள்ளார்.
 
மம்தாவின் அறிவிப்பால் மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

சட்டீஸ்கரில் மர்மமான தம்பதி மரணம்: லிப்ஸ்டிக் எழுதிய குறிப்புகள் மூலம் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments