Publish Date: Sat, 13 Jan 2024 (14:51 IST)
Updated Date: Sat, 13 Jan 2024 (14:52 IST)
டி.என்.பி.எஸ்.சி தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற சாய்புல்லா என்பவரை தேர்வு செய்ய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தேர்வாணையம் தாக்கல் செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த குளறுபடிகளை விசாரணை செய்ய விசாரணைக்குழு அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
அரசுப்பணிக்கு தேர்வில் ஏற்படும் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும் என்றும், ஒரு மாதத்தில் விசாரணைக்குழு அமைக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
விசாரணைக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் தேர்வாணையத்துக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வாணைய அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை முடித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது