Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவல் நிலையத்தில் மஜாஜ் செய்யும் சப் - இன்ஸ்பெக்டர்...

காவல் நிலையத்தில்  மஜாஜ் செய்யும் சப் - இன்ஸ்பெக்டர்...
, வெள்ளி, 19 அக்டோபர் 2018 (16:34 IST)
பிஹார் மாநிலத்தில் கைமூர் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல்நிலையத்தில் மக்கள் தங்கள் குறைகளை கூற வந்த போது,அவர்களின் குறைகளைக் கேட்காமல் தலைக்கு மஜாஜ் செய்து கொண்டிருந்த சப்- இன்ஸ்பெக்டர் காவல் உதவி ஆணையரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மக்கள் வழக்கம் போல சைன்பூர் போலிஸ் ஸ்டேசனுக்கு சென்று குறைகள் கூறச்சென்றுள்ளனர் அப்போது அங்கு சீருடையில் அமர்ந்து ஒரு ஊழியரை வைத்து பணிநேரத்தில் தலைக்கு மஜாஜ் செய்துகொண்டிருந்திருக்கிறார் அந்த ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் ஏஎஸ்ஐ ஜாபர் இமாம்.
 
இந்தக்காட்சியை அங்கிருந்த ஒருவர் தன் மொபைல் போனில் வீடியோ எடுத்து வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரலானது.
 
இந்த வீடியோவை பார்த்த காவல் உதவி கண்காணிப்பாளர் ,பணியின் போது அலட்சியம் மற்றும் கவனக்குறைவாக இருந்து காவல் துறைக்கு களங்கம் விளைவித்த சப் இன்ஸ்பெக்டர் ஜாபர் இமாமை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
 
இம்மாதிரி ஏதேனும் ஒருவர் செய்யும் தவறுகள் ஒட்டு மொத்த காவல்துறைக்கும் அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும் மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.
 
இந்த சம்பவம் மற்ற காவல்களுக்கு ஒரு எச்சரிக்கை என பேசிக்கொள்வதாக செய்திகள் உலாவருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறந்த மகனின் பிறந்தநாளன்று குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட பெற்றோர்