Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’எனக்கு கள்ளக்காதலிதான் வேணும்?’, மனைவி, மகள்களுக்கு தீ வைத்த கொடூரம்!

Advertiesment
Fire
, ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (16:07 IST)
கள்ளக்காதலிதான் முக்கியம் என சொந்த மனைவி, மகள்களுக்கு கணவனே தீ வைத்த சம்பவம் மகாராஷ்டிராவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பூபர் பகுதியை சேர்ந்தவர் ப்ரசாத். இவருக்கு ப்ரீத்தி என்ற மனைவியும், சமீரா, சமிக்‌ஷா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். ப்ரசாத்திற்கு நீண்ட காலமாக வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

இதுதொடர்பாக ப்ரீத்திக்கும், ப்ரசாத்துக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் எழுந்து வந்திருக்கிறது. சமீபத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ப்ரசாத் தனது மனைவி மற்றும் மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தி உள்ளார். அப்போது ப்ரசாத் மீதும் தீப்பற்றியுள்ளது.


அவர்கள் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் கடுமையான தீக்காயங்கள் காரணமாக ப்ரீத்தி உயிரிழந்துள்ளார். இரு மகள்களும் 90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர். மனைவி, மகள்களுக்கு தீ வைத்த ப்ரசாத்தும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளார். அவர்மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Edited By: Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 நாட்களாக உண்ணாவிரதம்: கடலூர் சிறையில் இருக்கும் சவுக்கு சங்கருக்கு உடல்நலம் பாதிப்பு