Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

1 கோடி பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி: மகாராஷ்டிரா சாதனை!

Advertiesment
1 கோடி பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி: மகாராஷ்டிரா சாதனை!
, செவ்வாய், 27 ஜூலை 2021 (14:30 IST)
இந்தியாவில் 1 கோடி பேருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் செலுத்திய முதல் மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உருவெடுத்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
இந்நிலையில் கொரோனா 2 ஆம் அலை இந்தியாவில் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 44,19,12,395 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 1 கோடி பேருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 
இதன் மூலம் இந்தியாவில் 1 கோடி பேருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் செலுத்திய முதல் மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உருவெடுத்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6-12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி: எந்த மாநிலத்தில் தெரியுமா?