Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தி இனி தேவையில்லை.. தமிழ்நாடு பாணியில் மகாராஷ்டிரா அரசு.. சூப்பர் அறிவிப்பு..!

Siva
புதன், 18 ஜூன் 2025 (12:23 IST)
மகாராஷ்டிரா அரசு, பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாவது மொழியாக்கிய  முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அதை மாற்றியமைத்துள்ளது. இனி, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இந்திக்கு பதிலாக மற்றொரு இந்திய மொழியை தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
 
மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இந்தி பொதுவாக மூன்றாவது மொழியாக இருக்கும். ஆனால் இனிம்ர்ர்ல், மாணவர்கள் விரும்பினால் வேறு எந்த இந்திய மொழியையும் தேர்வு செய்யலாம்.
 
ஒரு வகுப்பில் குறைந்தது 20 மாணவர்கள் இந்தி அல்லாத வேறு மொழியை தேர்வு செய்தால், அதற்கென ஆசிரியர் நியமிக்கப்படுவார். 20க்கும் குறைவான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கற்பிக்கப்படும்.
 
ஆனால் அதே நேரத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் மராத்தி மொழி கட்டாயப் பாடமாக இருக்கும்.
 
கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில், இந்தியை கட்டாயமாக்கும் முடிவை மகாராஷ்டிர அரசு நிறுத்தி வைத்திருந்தது. மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா போன்ற கட்சிகள் மற்றும் மொழி ஆலோசனைக் குழுவின் எதிர்ப்புகளுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது புதிய திருத்தப்பட்ட மொழி கொள்கை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நிம்மதியை அளித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments