தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ திட்டங்கள் குறித்து மராட்டிய அமைச்சர் பாராட்டி பேசியுள்ளார்.
தமிழகத்தில் தூர கிராமங்களில் வீட்டிற்கே சென்று மருத்துவம் பார்க்கும் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த சேவையை மேலும் பல இடங்களிலும் விரிவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக திட்டங்கள் குறித்து பேசியுள்ள மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் அங்குஷ்ராவ் “தமிழ்நாட்டின் மருத்துவத்துறை செயல்பாடுகள் வெகுவாக கவர்ந்துள்ளன. முத்துலெட்சுமி ரெட்டி தாய் சேய் நலத்திட்டம், மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் பாராட்டத்தக்கது. இதை மகாராஷ்டிராவும் பின்பற்றும் எண்ணம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.