Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் – உயிரோடு மீட்பு !

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (08:32 IST)
மகாராஷ்டிராவில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு உயிரோடு மீட்டுள்ளது.

கடந்த மாதம் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த திருச்சியை சேர்ந்த சுஜித், ஹரியானாவைச் சேர்ந்த ஷிவானி என்ற இருவரும் அநியாயமாக உயிரிழந்தனர். இது இந்தியா முழுவதும் பரவலாக விவாதங்களை எழுப்பி விழிப்புணர்வை உண்டாக்கியது. இருந்தும் இது போல ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுவது நின்றபாடில்லை.

இந்நிலையில் நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் கல்வான் என்ற கிராமத்தில் 200 அடி ஆழ்துளைக் கிணற்றில், ரித்தேஷ் என்ற ஆறு வயது சிறுவன் விழுந்துவிட்டான். உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் குழு கயிறு கட்டி அவனை மீட்டுள்ளது. அதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் இப்போது இயல்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது அனைவருக்கும் ஆறுதலையும் நிம்மதியையும் தந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments