Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிரா கட்டிட விபத்து... பலி எண்ணிக்கை 20-தை தொட்டது!

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (10:07 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்று அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல். 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே என்ற பகுதியில் மூன்று அடுக்கு கொண்ட கட்டிடம் ஒன்று கடந்த 1984 ஆம் ஆண்டு கட்டியதாக தெரிகிறது. இந்த கட்டிடத்தில் மொத்தம் 21 வீடுகள் இருந்ததாகவும் அனைத்து வீடுகளிலும் பொது மக்கள் குடியிருந்ததாகவும் தெரிகிறது. 
 
இதனிடையே நேற்று அதிகாலை 3 மணிக்கு திடீரென இந்த கட்டிடத்தின் பாதி அளவு சரிந்தது. இந்த கட்டிடத்தில் உள்ள அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் தூக்கத்திலேயே பலர் என்ன நடந்தது என்பது தெரியாமலேயே 8 பேர் பலியாகினர் என முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. 
 
கட்டிட விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் மீட்க்கப்பட்டவர்களில் 36 பேரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிய நிலையில் அதில் 10 பேர் உயிரிழந்ததால் மரண எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் இன்னும் நடைபெற்று வரும் நிலையில் விபத்து தொடர்பாக 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமானம் பறப்பதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்ததால் வேலை வாய்ப்பை இழந்த இளைஞர்..!

மார்பகங்களை பிடிப்பது பாலியல் வன்கொடுமை குற்றம் அல்ல: அலகாபாத் உயர்நீதிமன்றம்

மருமகன் கொலை.. மகளை தூக்கிலிடுங்கள்: பெற்றோர் வைத்த கோரிக்கை..!

சேகர் பாபு என்னை ஒருமையில் பேசினார், முதல்வர் செயலால் வருத்தம்: வேல்முருகன்

மணப்பெண் சுய இன்பத்தில் ஈடுபட்டதால் விவாகரத்து கேட்டு வழக்கு! - மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி!

அடுத்த கட்டுரையில்
Show comments