மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி போட முகாமுக்கு சென்ற பெண்ணுக்கு தொடர்ந்து மூன்று முறை தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாநிலங்கள்தோறும் பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதல் டோஸ் தடுப்பூசிக்கு பின்னர் 90 நாட்களுக்கு பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் நடந்த தடுப்பூசி முகாம் ஒன்றி அரசு அதிகாரி ஒருவரின் மனைவி தடுப்பூசி போட்டுக் கொள்ள சென்றுள்ளார். அங்கு தவறுதலாக அவருக்கு மூன்று முறை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அவருக்கு உடல்நல சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் அவருக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், தொடர்ந்து அவரது உடல்நலம் கண்காணிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.