Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசு மாட்டின் அருகே சிறுநீர் கழித்த நபர் மீது தாக்குதல்! – வைரலான வீடியோவால் நடவடிக்கை!

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (16:40 IST)
மத்திய பிரதேசத்தில் மாட்டின் அருகே சிறுநீர் கழித்ததாக நபர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் ரத்லாம் பகுதியில் நபர் ஒருவர் பசு மாட்டின் அருகே சிறுநீர் கழித்ததாக கூறி அப்பகுதியிலிருந்து சிலர் அந்த நபரை மூர்க்கமாக தாக்கியுள்ளனர். இதை சுற்றி இருந்த வேறு சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

அந்த நபர் இழிவுபடுத்தப்பட்டு தாக்கப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. அதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த போலீஸார் தாக்குதல் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தமிழ்நாட்டில் பல இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்..! ஜி.கே வாசன் நம்பிக்கை..!!

புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவி..! பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு..!!

உடல்நலம் பாதித்த பெண் யானை..! 4-வது நாளாக தொடரும் சிகிச்சை..!!

காவல் துறை குறித்து அவதூறு வீடியோ.! பெண் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.!

சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் திடீர் ரத்து! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments