லூதியானா நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த வழக்கில் ஜெர்மனியில் ஒருவர் பிடிபட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தேசிய பாதுகாப்பு படை குண்டு வெடித்த பகுதியை சோதனையிட்டு வெடி பொருட்களின் தடயவியல் மாதிரிகளை சேகரித்தனர். அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது அவை (IED) ஐ.இ.டி வகையை சேர்ந்தது என தெரியவந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் லூதியானா நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த வழக்கில் ஜெர்மனியில் ஒருவர் பிடிபட்டுள்ளார். எஸ்ஃப்ஜெ அமைப்பை சேர்ந்த ஐஸ்விந்தர் சிங் முல்தானி என்பவர் ஜெர்மனியில் நேற்று பிடிபட்டார். வெடிகுண்டை கொண்டுசென்ற முன்னாள் போலீஸ்காரர் குண்டுவெடித்து இறந்த நிலையில் ஒருவர் பிடிபட்டுள்ளார்.