Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்தல் முடிவுகளால் வரலாறு காணாத உச்சத்தை தொட்டது பங்குச்சந்தை!

Advertiesment
sensex
, வியாழன், 23 மே 2019 (11:03 IST)
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் முதல்முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. வரலாறு காணாத சாதனை படைத்துள்ளது. 
தேர்தல் முடிவுகளையடுத்து பங்குச்சந்தையில் இதுவரை இல்லாத உச்சத்தை கண்டு சென்செக்ஸ் 944 புள்ளிகள் உயர்ந்தது 40,054 என்ற புதிய உச்சத்தை தொட்டது.  மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசுகள் உயர்ந்து 65.40 ஆக உயர்ந்தது. அதன்படி தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 282 புள்ளிகள் உயர்ந்து 12,020 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4-ஆவது நாளாக ஏற்றத்தை கண்டுள்ளது. இதன் மூலம் இந்திய ரூபாயின் மதிப்பும் அதிரித்துள்ளது. தேர்தலில் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளதால் பங்குச்சந்தையில் இத்தகைய ஏற்றம் நிலவுகிறது.
 
இது கடந்த பத்து ஆண்டுகளில் பங்குச்சந்தை காணாத உயர்வாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி முன்னிலை