Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவை உளவு பார்க்க வந்த சீன புறா? – கூண்டில் அடைத்த இந்தியா!

Advertiesment
இந்தியாவை உளவு பார்க்க வந்த சீன புறா? – கூண்டில் அடைத்த இந்தியா!
, செவ்வாய், 26 மே 2020 (09:33 IST)
லடாக் எல்லைப்பகுதியில் சீன – இந்திய எல்லையில் போர் பதட்டம் எழுந்துள்ள நிலையில் உளவு பார்க்க இந்தியாவிற்குள் புறா வந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக லடாக் எல்லைப்பகுதியில் சீன – இந்தியா இராணுவங்களுக்கு இடையே போர் பதட்டம் எழுந்துள்ளது. மே 5 அன்று இருநாட்டு படைகளிடையே சிறு மோதல் எழுந்த நிலையில், தற்போது சீன படைகள் எல்லை பகுதியில் பதுங்கு குழிகள் அமைத்தல் போன்ற செயல்பாடுகளில் இறங்கியுள்ளன. இந்தியாவும் தனது ராணுவத்தை எல்லை பகுதியில் குவித்து வருகிறது. சீனா இந்தியாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக செயல்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் லடாக் இந்திய எல்லைப்பகுதியில் அடையாள எண்களுடன் புறாக்கள் சில பறந்து வந்துள்ளன. அவற்றை பிடித்த லடாக் போலீஸார் ராணுவத்திடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். அடையாள எண்கள் இடப்பட்ட புறாக்கள் சீனாவிலிருந்து உளவு பார்க்க அனுப்பப்பட்டவையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் எல்லையில் நாளுக்கு நாள் பதட்டம் மேலும் அதிகரித்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் பாதிப்பு ஒன்றரை லட்சத்தை நெருங்கியது – மாநிலவாரி நிலவரம்!