Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோமியம் குடித்தால்தான் உள்ள விடுவோம்! - பாஜக நிர்வாகி அறிவிப்பால் சர்ச்சை!

Prasanth Karthick
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (10:40 IST)

நவராத்திரி விழாவிற்கு கோமியம் குடித்தால்தான் உள்ளே அனுமதிப்போம் என பாஜக நிர்வாகி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இந்தியா முழுவதும் பிரபலமான நவராத்திரி விழா நாளை மறுநாள் (அக்டோபர் 3) தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த நவராத்திரி நாட்களில் வடமாநிலங்களில் கொண்டாடப்படும் ‘கார்பா’ நிகழ்ச்சி புகழ்பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வருபவர்கள் கோமியம் குடிக்க வேண்டும் என பாஜக நிர்வாகி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நவராத்திரியை ஒட்டி கார்பா நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், நிகழ்ச்சிக்கு வருபவர்கள் தாங்கள் இந்துக்கள்தான் என்பதை நிரூபிக்கும் விதமாக கோமியம் குடிக்க வேண்டும் என்றும், இதன் மூலம் உண்மையான இந்துக்களை கண்டறிய முடியும் என்றும் இந்தூர் மாவட்ட பாஜக தலைவர் சிண்டு வர்மா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு சொல்லியுள்ளார்.

 

மேலும் உண்மையான இந்துக்கள் இதை மறுக்க மாட்டார்கள் என்றும் அவர் பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் வேர்க்கடலை பயிரிட குஜராத்தில் விதைகளை வாங்கும் விவசாயிகள் - என்ன காரணம்?

மோடி, அமித்ஷாவை சந்திக்கும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ்.. யார் முதல்வர்?

நெல்லையை அடுத்து மதுரையில்.. அதிமுக ஆய்வுக்குழு கூட்டத்தில் அடிதடி..!

சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை..!

தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.. அர்ஜூன் சம்பத் பேச்சு

அடுத்த கட்டுரையில்
Show comments