Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

Mahendran
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (09:58 IST)
ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நீடிக்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி நீலகிரி மாவட்டத்திற்கு பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து வாகனங்கள் மூலம் வருகை தரும் சுற்றுலா பயணிகள் 07.05.2024 முதல் இ-பாஸ் பயன்படுத்தி நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய உத்தரவிடப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து இது நாள் வரை இ-பாஸ் முறை நடைமுறையில் இருந்து வரும் நிலையில், மாண்பமை சென்னை உயர்நீதி மன்றத்தால் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இ-பாஸ் நடைமுறையினை நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
எனவே நீலகிரி மாவட்டத்திற்குள் வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு http://www.epass.tnega.org என்ற இணையதளம் மூலம் இ-பாஸ் பெற்று நீலகிரி மாவட்டத்திற்குள் வருகை தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொது மக்கள், நீலகிரி மாவட்ட பதிவு எண் TN 43 பெற்றிருந்தால் அந்த வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் இ-பாஸ் சரிபார்ப்பு பணிக்காக வாகனங்களை நிறுத்தி சரிபார்ப்பிற்கு பிறகு நீலகிரிa மாவட்டத்திற்குள் நுழைய கேட்டுக்கொள்ளப்படுவதுடன் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய ஒத்துழைப்பினை நல்குமாறு அனைத்து பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் வான் சாகச நிகழ்ச்சி.. விமான அட்டவணையில் மாற்றம்..!

ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு.. விரைந்து நலம் பெற வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்..!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு.. எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..

பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து.. அலறியடித்து இறங்கிய பயணிகள்..!

ரஜினிகாந்த் உடல்நிலை நிலவரம்.. மருத்துவமனை வெளியிட்ட தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments