Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2023 ஆம் ஆண்டிற்கான தூய்மை நகரங்கள் பட்டியல் வெளியீடு!

Advertiesment
Clean Cities Award

Sinoj

, வியாழன், 11 ஜனவரி 2024 (14:20 IST)
2023 ஆம் ஆண்டிற்கான நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலை இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில்,  கடந்த 2016 ஆம் ஆண்டு  பிரதமர் மோடி 'ஸ்வஸ் சர்வேக்சான்' என்ற தூய்மையான  நகரங்களுக்கான விருது வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையி,  நாட்டில் தூய்மையில் சிறப்பாக இருக்கும் நகரங்கள் பற்றிய பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

அதன்படி,2023 ஆம் ஆண்டிற்கான பட்டியலை இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், இந்தூர் மற்றும் சூரத் ஆகிய இரு நகரங்கள் முதலிடமும்,   நவி மும்பை 3 வது இடமும் பிடித்துள்ளது.

ஸ்வஸ் சர்வேக்சான் திட்டத்தின் கீழ் சிறப்பாக  விளங்கும்  மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடமும், மத்திய பிரதேசம் 2 வது இடமும், சத்தீஸ்கர் 3 வது இடமும் பிடித்துள்ளது.

முதல் இடம் பிடித்துள்ள  நகரங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வெற்றிக்கான விருதை அம்மா நில அதிகாரிகளிடம் வழங்கி கெளரவித்தார்.

இந்தூர் தொடர்ந்து 7வது முறையாகக முதலிடத்தை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முருகனின் அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா.. இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!