Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்! மலையேறும் பக்தர்களுக்கு எச்சரிக்கை!

Advertiesment
திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்! மலையேறும் பக்தர்களுக்கு எச்சரிக்கை!

Prasanth Karthick

, வெள்ளி, 31 ஜனவரி 2025 (11:23 IST)

திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளதால் மலையேறும் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அவ்வப்போது புலி, சிறுத்தை நடமாட்டம் உள்ளிட்டவற்றால் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. அவ்வபோது வனத்துறையினர் மிருகங்களை கூண்டு வைத்து பிடித்து காட்டுப் பகுதிகளில் விட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் திருப்பதி கோவிலில் இருந்து 5கி.மீ தொலைவில் உள்ள சீலா தோரணம் மலைப்பகுதியில் சிறுத்தை ஒன்று ஓய்வு எடுத்துக் கொண்டிருந்ததை அப்பகுதி வழியாக சென்ற பக்தர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் தகவலறிந்து வந்து பார்த்தபோது சிறுத்தை அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்றிருந்தது.

 

எனினும் சிறுத்தை பக்தர்களின் மலைப்பாதையில் குறுக்கிடலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் திருப்பதி மலைப்பாதையில் பயணிக்கும் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி தேவஸ்தான அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமாவும், சூதாட்டமும் ஒரே பிரிவில்.. பஸ் பிடித்து Finance Ministerஐ பார்ப்பேன்! - நடிகர் விஷால் பேட்டி!