Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளம்பெண்ணை கற்பழித்து வீடியோவை இணையத்தில் விட்ட இளைஞர்கள்- வீடியோவாலேயே போலீஸில் சிக்கினர்

இளம்பெண்ணை கற்பழித்து வீடியோவை இணையத்தில் விட்ட இளைஞர்கள்- வீடியோவாலேயே போலீஸில் சிக்கினர்
, புதன், 3 ஜூலை 2019 (19:07 IST)
கர்நாடகாவில் இளம்பெண் ஒருவரை கற்பழித்து அதை வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பியவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கர்நாடகாவின் புத்தூர் பகுதிகளில் சமீபத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவியுள்ளது. அதில் காரில் வைத்து ஒரு பெண்ணை சில இளைஞர்கள் கற்பழிக்கும் காட்சி இருந்தது. இந்த தகவல் புத்தூர் போலீஸுக்கு தெரியவும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீஸார் முதலில் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணை தேடி கண்டுபிடித்தனர். அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த பெண் தனக்கு நடந்த கொடுமைகளை கூறினார். அவரை கற்பழித்து எடுத்த வீடியோவை வைத்து அடிக்கடி அந்த இளைஞர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். தனக்கு நடந்த கொடுமையை பற்றியும் வீடியோவை வைத்து மிரட்டுவது பற்றியும் அந்த பெண் வீட்டில் கூட சொல்லவில்லை. அவர்கள் கேட்கும் பணத்தை அந்த பெண்ணால் தர முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இந்த வீடியோவை இணையத்தில் பரப்பிவிட்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீஸார் உடனடியாக அந்த வீடியோ இணையத்தில் பரவாமல் தடுத்தனர். பிறகு அந்த இளைஞர்களை கைது செய்தனர். அந்த இளைஞர்கள் ஐந்து பேரும் புத்தூரில் ஒரே கல்லூரியில் படித்து வந்திருக்கிறார்கள்.  அவர்களுடைய செல்போன், லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அந்த பெண்ணுக்கு இப்படிப்பட்ட அசம்பாவிதம் நடந்தது கடந்த மார்ச் மாத இறுதியில். ஆனால் அந்த பெண் இந்த சம்பவத்தை போலீஸ் கண்டுபிடித்து வந்து கேட்கும் வரை யாரிடமும் சொல்லவில்லை. இதுகுறித்து பேசிய எஸ்.பி லக்‌ஷ்மி பிரசாத் “பெண்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை காவல்துறையில் சொன்னால்தான் எங்களால் உதவ முடியும். பெண்கள் இதற்கு முன்வரவேண்டும்” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதல் திருமணம் செய்த தம்பதியரை அடித்து உதைத்த உறவினர்கள்..