Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டிற்குள் புகுந்து நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை!: வைரலான வீடியோ!

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (17:39 IST)
குஜராத்தில் வீட்டு வளாகத்துக்குள் புகுந்து தூங்கி கொண்டிருந்த நாய் ஒன்றை வேட்டையாட சிறுத்தை ஒன்று முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குஜராத்தில் அம்ரேலி பகுதியில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று ஒரு பங்களா வளாகத்தில் நுழைந்திருக்கிறது. அங்கே வீட்டு கதவின் அருகே படுத்து உறங்கி கொண்டிருந்த நாயின் அருகே சத்தமில்லாமல் மெல்ல நெருங்கிய அந்த சிறுத்தை, கண்ணிமைக்கும் நேரத்தில் சடாரென நாயின் கழுத்தை பிடித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நாய் சடாரென கத்திக்கொண்டு பாய்ந்து எழுந்து சிறுத்தையின் பிடியிலிருந்து விடுபட்டது. சுதாரித்து கொண்டு திரும்பி பார்த்த அந்த நாய் தன்னை தாக்கியது சிறுத்தை என்று தெரிந்ததும் அந்த இடத்திலிருந்து வேகமாக ஓட்டம் பிடித்தது. நாயை துரத்தி கொண்டு சிறுத்தையும் ஓடியது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவ அந்த நாய்க்கு என்ன ஆனதோ என பலரும் பதறிபோய் பதிவிட்டு வந்திருக்கின்றனர். சிலர் அந்த நாய்க்கு எதுவும் ஆகியிருக்க கூடாது என கமெண்டிலேயெ தங்களது பிரார்த்தனைகளை செலுத்தியிருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments