குஜராத்தின் ராஜ்கோட்டிற்குப் பிறகு இப்போது நாட்டின் மற்றொரு நகரத்தில் எலுமிச்சையின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
ஆம், ஜெய்ப்பூரில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் சுமார் ரூ.400-க்கு விற்கப்படுகிறது. விநியோகத்தில் பற்றாக்குறை மற்றும் சிட்ரஸ் பழங்களின் தேவை அதிகரிப்பு காரணமாக இந்த விலை உயர்வு இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரில் ஒரு சிட்ரஸ் பழம் ரூ.30க்கு விற்கப்படுவதால் எலுமிச்சை விலை உயர்வு சாமானியர்களை கடுமையாக பாதித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்த வரை ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோவுக்கு 20 எலுமிச்சைகள் மட்டுமே இருக்கும், அதன்படி ஒரு எலுமிச்சை ரூ.12க்கு விற்கப்படுகிறது.