5 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர் ஜெயிண்ட் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.
இன்றைய போட்டியியோல் ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி முதலில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளார். எனவே கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதில், 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 158 ரன் கள் எடுத்து, குஜராத் அணிகு 159 ரன் கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
லக்னோ அணியின் ஹூடா அதிகபட்சமாக 55 ரன் களும், படோனி 54 ரன்களும் குனால் பாண்ட்யா 21 ரன் களும் அடித்தனர்.
இதையடுத்து குஜராத் அணி பேட்டிங் செய்தது. மேத்யு 30 ரன்களும், ஹர்த்திக் பாண்டியா 33 ரன்களும், திவேதியா 40 ரன்களும் , அபினவ் மனோகர் 15 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உதவினர்.
எனவே குஜாரத் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.