Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெளியானது சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்..! மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி..!!

Advertiesment
Students

Senthil Velan

, திங்கள், 13 மே 2024 (13:26 IST)
சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் மாணவர்களை விட மாணவிகள் 6.4 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டன. சென்னை மண்டலத்தில் 98.47 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 6.4 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்தமாக மாணவிகள் 91.52 சதவீதமும், மாணவர்கள் 85.12 சதவீதமும், மூன்றாம் பாலினத்தவர் 50 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.65 சதவீத மாணவ, மாணவிகள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் CTSA எனப்படும் மத்திய திபெத்திய பள்ளிகள் நிர்வாகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்த வகைப் பள்ளிகள், 99.23 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. ஜவஹர் நவோதயா பள்ளிகள், 98.9 சதவீதத் தேர்ச்சியையும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், 98.81 சதவீதத் தேர்ச்சியையும் பெற்றுள்ளன. தனிப்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகள், 87.7சதவீதத்தைப் பெற்று, கடைசி இடத்தில் உள்ளன.

 
12-ம் வகுப்புக்கான கம்பார்ட்மென்ட் தேர்வுகள், வரும் ஜூலை 15-ம் தேதி முதல் நடைபெறும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் அலுவலகத்தில் நான் தாக்கப்பட்டேன்: ஆம் ஆத்மி பெண் எம்பி அதிர்ச்சி தகவல்..!