Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்பயா குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன ? – சிறை நிர்வாகம் கேள்வி !

Webdunia
வியாழன், 23 ஜனவரி 2020 (14:32 IST)
நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை நெருங்கி வரும் வேளையில் அவர்களின் கடைசி ஆசை என்ன என சிறைத்துறை நிர்வாகம் கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மருத்துவக் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நான்கு பேர்களுக்கு நேற்று தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு அவர்கள் நால்வரும் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிடப்படுவார்கள் என நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் தூக்குத் தண்டனை நாள் உள்ளதால் அதற்கான வேலைகளில் திகார் சிறை நிர்வாகம் செய்து வருகிறது. இந்நிலையில் குற்றவாளிகளிடம் அவர்களின் கடைசி ஆசை என்ன எனக் கேட்டுள்ளது. ஆனால் அவர்கள் இதுவரை எதுவும் சொல்லவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில் அவர்களின் குடும்பத்துக்கு தண்டனை குறித்து கடிதம் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்