லாலு பிரசாத் யாதவ் வீட்டில் குடும்ப சண்டை.. வீட்டை விட்டு வெளியேறிய 4 மகள்கள்..!

Mahendran
திங்கள், 17 நவம்பர் 2025 (11:42 IST)
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தில் நிலவி வந்த உட்பூசல், இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கட்சி தலைமை போட்டி காரணமாக எழுந்த சண்டையின் விளைவாக, லாலுவின் மகள்களான ரோஹிணி ஆச்சாரியா, ராகிணி, சாந்தா மற்றும் ராஜலஷ்மி ஆகியோர் பாட்னாவில் உள்ள பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ள தகவல் பிகார் அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்திய பிகார் தேர்தல் தோல்விக்கு பிறகு, RJD-யின் எதிர்கால தலைமை குறித்துக் குடும்ப உறுப்பினர்களிடையே மோதல் வலுத்துள்ளது. தந்தைக்கு சிறுநீரக தானம் செய்த ரோஹிணி, தன்னை சிலர் வீண் பழி சுமத்தி, மக்களவை தொகுதி கேட்டு வற்புறுத்துவதாகவும், பல கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்றதாகவும் குற்றம்சாட்டி வெளியேறினார்.
 
ரோஹிணியின் இந்த முடிவை தொடர்ந்து, அவரது மற்ற மூன்று சகோதரிகளும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த சம்பவம், கட்சித் தலைமையை வகிக்கும் இளைய மகன் தேஜஸ்வி யாதவுக்கும் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும் இடையேயான நீண்டகால வேறுபாடுகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.
 
தன் சகோதரி ரோஹிணி அவமானப்படுத்தப்பட்டதை குறித்து வேதனை தெரிவித்த தேஜ் பிரதாப் யாதவ், "அவருக்கு நடந்த அவமானத்தை என்னால் தாங்க முடியவில்லை" என்று சமூக வலைத்தளத்தில் கடுமையாக பதிவிட்டுள்ளார். இது லாலுவின் குடும்பத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை உறுதிப்படுத்துகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments