Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இப்படி இலவச பேருந்து விட்டா மெட்ரோல எப்படி போவாங்க? – மகளிர் இலவச பேருந்தை விமர்சித்த L&T நிறுவன இயக்குனர்!

Advertiesment
Shankar Raman

Prasanth Karthick

, திங்கள், 13 மே 2024 (17:10 IST)
பல மாநிலங்களில் பெண்களுக்கு இலவச பேருந்து செயல்பாட்டில் உள்ள நிலையில் அதை எல் அண்ட் டி நிறுவன இயக்குனர் விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தபோது பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் மேலும் சில மாநிலங்களிலும் பல கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு இலவச பேருந்து சலுகையை அறிவித்தன.

அந்த வகையில் தெலுங்கானாவிலும் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தை L&T நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷங்கர் ராமன் “தெலுங்கானாவில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்படுவதால் மெட்ரோ பயணங்களின் மீதான ஈடுபாடு குறைந்துவிட்டது. பாலின பாகுபாடுகள் உருவாகிறது. பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும்போது, ஆண்கள் மெட்ரோக்களில் அதிக தொகை பயணிக்க வேண்டியிருக்கிறது” என்று விமர்சித்துள்ளார்.

மேலும் அந்த நிறுவனம் ஹைதராபாத்தில் நடைபெற உள்ள மெட்ரோ ரயில் திட்ட பணிகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த திட்ட பணிகளில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக் கொண்ட நபர் உயிரிழப்பு.. விசாரணைக்கு உத்தரவு..!