Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராகுல் காந்தியின் செல்பொனை ஒட்டுகேட்பதால் பாஜகவுக்கு எந்த பலனும் இல்லை… குஷ்பு கருத்து!

ராகுல் காந்தியின் செல்பொனை ஒட்டுகேட்பதால் பாஜகவுக்கு எந்த பலனும் இல்லை… குஷ்பு கருத்து!
, செவ்வாய், 20 ஜூலை 2021 (16:47 IST)
ஒன்றிய அரசு கடந்த சில ஆண்டுகளில் முக்கிய அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்களை ஒட்டு கேட்ட விவகாரத்தில் ராகுல் காந்தியையும் உளவு பார்த்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெகாசூஸ் ஸ்பைவேர் என்ற இஸ்ரேலிய மென்பொருள் மூலமாக இந்தியாவில் 300க்கும் மேற்பட்டவர்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. ஆனால் சம்மந்தபட்ட மென்பொருள் நிறுவனம் அரசுகளுக்கு மட்டுமே தாங்கள் தங்கள் மென்பொருளை வழங்கியதாக சொல்லியுள்ளதால் இந்தியாவில் மோடி தலைமையிலான அரசே ஒட்டுக்கேட்டு இருக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் அந்த 300 பேரில் ராகுல்காந்தியின் செல்போனும் ஒட்டுக்கேட்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதைக் காங்கிரஸ் கடுமையாகக் கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டமாக எடுத்து செல்வதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை ஆளும் பாஜக அரசு மறுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டு பற்றி பேசியுள்ள பாஜகவின் குஷ்பு ‘ராகுல்காந்தியின் செல்போனை ஒட்டுக் கேட்பதால் பாஜகவுக்கு எந்த பலனும் இல்லை ‘ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எச் ஐ வி நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்!