Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்நாடகத்தின் முதலமைச்சராக குமாரசாமி 23-ந் தேதி பதவியேற்பு

Advertiesment
கர்நாடகத்தின் முதலமைச்சராக குமாரசாமி 23-ந் தேதி பதவியேற்பு
, ஞாயிறு, 20 மே 2018 (09:56 IST)
எடியூரப்பா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, கர்நாடகத்தின் முதலமைச்சராக குமாரசாமி 23-ந் தேதி பதவியேற்க உள்ளார்.
கர்நாடகத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், பாஜகவை சேர்ந்த் எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
 
இதனையடுத்து கர்நாடக ஆளுனர் வஜூபாய் வாலா குமாரசாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதன்படி நேற்று இரவு 7.30 மணிக்கு ஆளுனர் வஜூபாய் வாலாவை குமாரசாமி சந்தித்தார்.
 
அதன்படி கர்நாடக மாநில புதிய முதலமைச்சராக  23-ந் தேதி பதவியேற்க உள்ளதாக குமாரசாமி தெரிவித்தார். மேலும் இந்த பதவியேற்பு விழாவிற்கு ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். 
 
காங்கிரஸ் - மஜத கூட்டணிக்கு காரணமான சோனியா காந்தி, ராகுல்காந்தி, சித்தராமையா ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக குமாரசாமி தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்: தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?