மத்திய அரசு அமைத்துள்ள காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும் விதமாக கர்நாடக மாநில எம்பிக்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இதற்கான அழைப்பிதழ்கள் தனித்தனியாக எம்.பிகளுக்கு அனுப்பட்டுள்ளது. அதனுடன், ஐபோன், தோல் பேக் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருட்களும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளதாம்.
ஆனால், இந்த பரிசு பொருட்களை ஏற்க முடியாது என கூறி பாஜக எம்பிக்கள் சிலர் திருப்பி அனுப்பி வைத்து விட்டனர். இதனை கண்டித்து, இதுபோன்ற வீண் செலவுகள் செய்வதற்காக நீங்கள் ஆட்சி பொறுப்பு ஏற்கவில்லை. இதுபோன்ற வீண் செலவு அவசியமா? என பாஜக தரப்பில் கேள்வி எழுப்பட்டுள்ளது.
ஆனால், முதல்வர் குமாரசாமி, எந்த பரிசு பொருட்களையும் அனுப்பவில்லை. அதேசமயம் கர்நாடக மாநில பொதுப்பணித்துறை அமைச்சரும், காங்கிரஸைச் சேர்ந்த மூத்த தலைவருமான சிவக்குமார், தனிப்பட்ட முறையில் ஐபோனை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.