கூட்டணியில் ஆட்சியில் முதல்வராக இருப்பது மகிழ்ச்சி இல்லை என்று கர்நாடகா முதல்வர் குமாரசாமி கண்ணீர் விட்டுள்ளார்.
கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலில் தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து முதல்வரானவர் குமாரசாமி. பெங்களூரில் விவசாய கடன் தள்ளுபடி செய்வதற்காக பாராட்டு விழா நடைபெற்றது.
அதில் கலந்துக்கொண்டு பேசியவர், நான் முதல்வராக இருப்பதில் தொண்டர்களும் மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை. முதல்வர் பதவி என்பது ரோஜாப்பூ படுக்கை அல்ல. முட்கள் நிறைந்த படுக்கையாகும்.
கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் பணியாற்ற வேண்டும். பாஜகவின் தாக்குதல்களை எதிர்கொண்டு பதிலடி கொடுக்க வேண்டும். எனக்கு நெருக்கடிகள் கூடினால் எந்த நேரத்திலும் முதல்வர் பதவியை விலக நான் தயாராக உள்ளேன் என்று கண்ணீருடன் கூறினார்.